ராகு கேது தோஷம் என்றால் என்ன
ஜாதகத்தில் ராகு கேது தோஷம் பற்றிய சில விளக்கங்கள்
புதுப்பிக்கப்பட்டது: ஆகஸ்ட் 2026
ஜாதகத்தில் ராகு கேது தோஷம்
- ராகு கேது தோஷம் என்பது முக்கியமாக ராசி அல்லது லக்னத்திற்கு 1, 2, 7, 8 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பதை சொல்லப்படுகிறது.
- ராகு கேதுக்களில் இருவரில் ஒருவர் இரண்டில் இருந்தால் மற்றவர் எட்டில் இருப்பார். அதுபோல் ஏழில் ஒருவர் இருந்தால் மற்றவர் லக்னத்திலோ ராசியிலோ இருப்பார். இதுவே ராகு கேது தோஷம் என சொல்லப்படுகிறது.
- இட அமைப்பு: லக்னத்திற்கு 1, 2, 7 மற்றும் 8-ம் இடங்களில் ராகு அல்லது கேது அமர்ந்தால் சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும்.
- கால சர்ப்ப தோஷம்: அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்குள் அடங்கி ஒருபுறம் மட்டும் அமைந்திருக்கும் நிலை கால சர்ப்ப யோகம் அல்லது தோஷம் எனப்படும்.
- ஆனால் நடைமுறையில் ராகு கேதுக்கள் எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் அந்த பாவகத்தில் தடை தாமதங்களை உண்டு பண்ணுவார்கள்.
- உதாரணத்திற்கு ஏழில் ராகு கேதுக்கள் இருக்க திருமணம் தாமதமாவது அன்னிய துணையுடன் திருமணம் அமைவது போன்றவற்றை செய்வார்கள்.
- பொதுவாக ராகு கேதுக்கள் ஒரு பாவகத்தில் இருந்தால் அவர்களே அந்த பாவகத்தின் பலன்களை செய்வார்கள். அதாவது அவர்களின் தசா புக்திகள் வரும் வரை அந்த பாவகம் தொடர்பானதை ஜாதகருக்கு கிடைக்க விடமாட்டார்கள்.
- ராகு கேது தோஷத்தை பொத்தாம் பொதுவாக எண்களில் எடுக்காமல் இருவரும் அமர்ந்த ராசி, ராகு கேதுக்களை பார்க்கும் மற்ற கிரகங்களின் நிலை, ராகு கேதுக்களின் நவாம்ச நிலை, நீங்கள் எந்த லக்னம் என அனைத்தையும் சேர்த்து சீர் துக்கி பார்த்தாலே ராகு கேது தோஷம் வேலை செய்யுமா? அல்லது செய்யாதா? தாமதமாக பலன்களை செய்யுமா? அல்லது பலன்களை தடுக்குமா? போன்றவற்றை புரிந்து கொள்ள முடியும்.